மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று முடிவு

​மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் இன்று (சனிக்கிழமை) எடுக்கவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் இன்று (சனிக்கிழமை) எடுக்கவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லண்டனிலிருந்து காணொலி வாயிலாகப் பங்கேற்கிறார்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பெருவாரியான இடங்கள் உள்பட மொத்தம் 8 மாநிலங்களவை இடங்களை காங்கிரஸ் கைப்பற்றவுள்ளது. மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, விவேக் தன்கா, அஜய் மாக்கென், ராஜீவ் சுக்லா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி உள்ளிட்டோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். அதேசமயம், உள்ளூர் தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினரின் முகங்களாக இருப்பவர்களுக்கும் வாய்பபுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பாளர்கள் இறுதி செய்யப்படவுள்ள இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கவுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். லண்டனில் உள்ள ராகுல் காந்தி காணொலி வாயிலாகக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம், மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் இன்று (சனிக்கிழமை) மாலைக்குள் இறுதி செய்யப்படவுள்ளார்கள்.

ராஜஸ்தானில் 3 மாநிலங்களவை இடங்களுக்கு காங்கிரஸ் போட்டியிடுகிறது. ஒரு இடத்துக்குப் போதிய ஆதரவு கிடைக்காமல் போகலாம். இதற்கு பாஜக அல்லாத எம்எல்ஏ-க்களை காங்கிரஸ் நம்பியுள்ளது. சத்தீஸ்கரில் இரண்டு மாநிலங்களை இடங்களைக் கைப்பற்றும் நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. 

இதுதவிர மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் தலா ஒரு இடத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது. ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணியில் இருப்பதால், அங்கும் ஒரு இடத்தை காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com