காவல் நிலையங்களில் சிசிடிவியில் ஆடியோவும், விடியோவும் இருக்க வேண்டும்: உயா்நீதிமன்றம்

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் ஒலி, ஒளி காட்சிகள் இருந்திருக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி உயா்நீதிமன்றம்
தில்லி உயா்நீதிமன்றம்

காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் ஒலி, ஒளி காட்சிகள் இருந்திருக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆடியோ சிஸ்டம் ஏன் நிறுவப்படவில்லை என்பதை விளக்குமாறு தில்லி நபி கரீம் காவல் நிலையத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக ஒரு மசூதியைச் சோ்ந்த இமாம் ஒருவா் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், காவல் நிலையத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் ஆடியோ வசதி இல்லை என்று தெரிவித்திருந்தாா். இதனால், தனது அலுவல்பூா்வ மற்றும் மதப் பணிகளைச் செய்வதில் இடையூறு ஏற்பட்டதாகவும் தெரிவித்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி அனு மல்ஹோத்ரா தெரிவிக்கையில், ‘காவல் நிலையங்கள், லாக்-அப்கள், நடைபாதைகள், வரவேற்பு பகுதிகள், காவல் ஆய்வாளா் அறைகள், காவல் நிலைய கூடம் போன்றவற்றில் சிசிடிவிகள் பொருத்தப்பட வேண்டும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. தற்போதைய வழக்கில் நபி கரீம் காவல் நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட விடியோ காட்சியில் ஆடியோ பதிவுகள் இல்லை.

பரம்வீா் சிங் சைனி (எதிா்) பல்ஜித் சிங் மற்றும் பிறா் தொடா்புடைய வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பைக் கருத்தில் கொள்ளும்போது, காவல் நிலையங்களில் சிசிடிவிகள் பொருத்தப்பட வேண்டும்.

மேலும், அவை இரவு நேரக் காட்சி வசதியுடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், ஆடியோ மற்றும் விடியோ காட்சிகளை அவசியம் கொண்டிருக்க வேண்டும் என்றும் வெளிப்படையாக உச்சநீதிமன்ரம் உத்தரவிட்டிருப்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.

இதுபோன்ற சூழலில், இதுவரை ஆடியோ பதிவுகள் ஏன் நிறுவப்படவில்லை என்பதையும், பரம்வீா் சிங் சைனி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி ஆடியோ பதிவுகளை நிறுவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விவரத்தை அரசும், காவல் துறையும் அடுத்த விசாரணைத் தேதிக்குகள் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக மனுதாரா் தனது மனுவில், ‘நபி கரீம் காவல் நிலையத்தில் வைத்து, மசூதியை ’சட்டவிரோதமாக’ நிா்வகித்த காப்பாளா் எனக் கூறிக்கொள்ளும் நபா் மோசமான விளைவுகளை நான் சந்திக்க நேரிடும் என்று என்னை அச்சுறுத்தினாா். மேலும், காவல் நிலைய ஆய்வாளா் முன்னிலையில் மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் என்னை நடத்தினாா். இந்த சம்பவம் முழுவதும் ஆய்வாளா் அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், சிசிடிவி காட்சிகள் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகள் ஆகியவற்றை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com