மேற்கு வங்கத்தில் கரோனா பலி இல்லாத 23வது நாள்

மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த யாரும் கடந்த 23 நாள்களில் பலியாகவில்லை என்ற நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கரோனா பாதித்த யாரும் கடந்த 23 நாள்களில் பலியாகவில்லை என்ற நல்ல செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது. 

இது கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பலி பதிவானதற்குப் பிறகு, இத்தனை நாள்கள் கரோனா பலி பதிவாகாத நாள்களாக இருக்கின்றன.

கடைசியாக, மே மாதம் ஆம் தேதிதான் மேற்கு வங்கத்தில் கரோனா பலி பதிவாகியிருந்தது. இதற்கு முன்பு, இதுபோல கரோனா பலி பதிவாகாத நாள்களின் வரிசையில் 15 நாள்களே அதிகட்பமாச இருந்தது. ஏப்ரல் 17 முதல் 22 வரை அங்கு கரோனா பலி பதிவாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர்களின் அயராத முயற்சி மற்றும் முன்னெடுக்கும் விழிப்புணர்வுகள் மூலமாக இது சாத்தியமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com