மக்கள் புகையிலை பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்: கேரள முதல்வர்

மக்களுக்கும், இயற்கைக்கும் கேடுவிளைவிக்கும் புகையிலையை தவிர்க்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 
மக்கள் புகையிலை பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்: கேரள முதல்வர்

மக்களுக்கும், இயற்கைக்கும் கேடுவிளைவிக்கும் புகையிலையை தவிர்க்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

தொற்றுநோயால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, புகையிலையைப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும், இயற்கைக்கும் தீங்கு விளைவிக்கும். எனவே மக்கள் புகையிலை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, முதல்வர் அவரது முகநூல் பதிவில், 

புகையிலை பயன்பாடு மனித ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல, இயற்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. 

புகையிலையால் கொடிய பக்க விளைவுகள் ஏற்படுவதால், மக்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். 

புகையிலையைக் கைவிட்டு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என அவர் தனது பதிவில் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com