தி‌ல்லி அமைச்​ச‌ர் ச‌த்​யேந்​த‌ர் ஜெ‌யி‌ன் கைது

ஹவாலா பணப் பரிவர்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சத்யேந்தர் ஜெயின்
சத்யேந்தர் ஜெயின்

ஹவாலா பணப் பரிவர்த்தனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், தில்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட இந்த வழக்கில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் திங்கள்கிழமை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, கேள்விகளுக்கு சரியான முறையில் பதிலளிக்காததால், அவர் கைது செய்யப்பட்டார் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

2013-ஆம் ஆண்டு முதல் தில்லியில் ஆட்சியில் உள்ள முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அரசில் தொடர்ந்து மூன்றாவது முறையாக சத்யேந்தர் ஜெயின் (57) அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், 2015-6 ஆண்டுகளில் அமைச்சராக சத்யேந்தர் ஜெயின் பதவி வகித்தபோது, அவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் பதியப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பெயரளவில் செயல்படும் போலி நிறுவனங்கள் (ஷெல்) மூலம் ரூ.4.81 கோடி பணப் பரிமாற்றம் நடைபெற்றது.

அந்தப் பணம் கொல்கத்தாவில் உள்ள ஹவாலா பண முகவர்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, தில்லிக்கு அருகே விவசாய நிலங்கள் வாங்கப்பட்டும், வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் அடைக்கப்பட்டும் உள்ளன என்று குற்றம்சாட்டி சிபிஐ 2017-இல் வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் சத்யேந்தர் ஜெயின் குடும்பத்தினரும் சேர்க்கப்பட்டனர். வருமான வரித்துறையினர் பணப் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையை நடத்தி, சத்யேந்தர் ஜெயினின் பினாமி சொத்துகளை முடக்கலாம் என்று ஒப்புதல் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கின் கீழ் அமலாக்கத் துறை சத்யேந்தர் ஜெயின், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க உத்தரவிட்டது. 

இந்நிலையில், பணப் பரிவர்த்தனை மோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் சத்யேந்தர் ஜெயினிடம் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை சில மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் கைது செய்யப்பட்டதாக திங்கள்கிழமை இரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கேஜரிவால் குற்றச்சாட்டு: முன்னதாக, பிப்ரவரி மாதம் நடைபெற்ற பஞ்சாப் பேரவைத் தேர்தலுக்கு முன்பே அமைச்சர் சத்யேந்தர் ஜெயினை அமலாக்கத் துறையினர் கைது செய்யலாம் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்து வந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com