அசாமில் 8000 லிட்டர் எண்ணெய் பறிமுதல்: 4 பேர் கைது

அசாமின் திப்ருகார் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 8000 லிட்டர் கண்டன்சேட் ஆயிலை திருடிய குற்றச்சாட்டின் பேரில் குறைந்தது 4 பேர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
அசாமில் 8000 லிட்டர் எண்ணெய் பறிமுதல்: 4 பேர் கைது

அசாம்: அசாமில் கைப்பற்றப்பட்ட 8,000 லிட்டர் கண்டன்சேட் ஆயிலை திருடிய குற்றச்சாட்டின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கண்டன்சேட் எண்ணெய் என்பது மிகவும் லேசான கச்சா எண்ணெயைப் போன்ற திரவ ஹைட்ரோகார்பன்களின் ஒரு கலவையாகும்.

பிரம்மபுத்திரா ஆற்றின் மீது உள்ள போகிபீல் பாலம் அருகே திருடப்பட்ட 8,000 லிட்டர் கண்டன்சேட் ஆயிலுடன் டேங்கரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் அல்லது ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் குழாயிலிருந்து திருடப்பட்டதாக இருக்கலாம். இந்த மோசடியில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவசாகர் மாவட்டத்தில் உள்ள நஹாராணியில் இருந்து தேமாஜிக்கு டேங்கர் சென்று கொண்டிருந்தபோது ​​எண்ணெய் டேங்கரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே வேளையில்  வடக்கு அசாம் பகுதியில் டேங்கர் மற்றும் குழாய்களில் இருந்து இத்தகைய எண்ணெய் திருடுவது பொதுவானது என்றார்.

எண்ணெய்த் திருட்டு அதிகரிப்பு காரணமாக, கடந்த ஆண்டு அக்டோபரில் ஆயில் இந்தியா லிமிடெட் அதன் நிறுவனங்களில் ட்ரோன் மூலம் கண்காணிப்பைத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com