2021-ல் வேலையின்மையால் 11,724 பேர் தற்கொலை செய்துள்ளனர்: காங்கிரஸ்

2021-ல் வேலையின்மையால் 11,724 பேர் தற்கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 
2021-ல் வேலையின்மையால் 11,724 பேர் தற்கொலை செய்துள்ளனர்: காங்கிரஸ்

2021-ல் வேலையின்மையால் 11,724 பேர் தற்கொலை செய்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

கடந்த 2021-ஆம் ஆண்டு நாட்டில் நடைபெற்ற தற்கொலைகள் தொடா்பான விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்டது. அதில் கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1,64,033 தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றன. இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அதிக எண்ணிக்கையாகும்.

இதில் அதிக தற்கொலைகள் நடைபெற்ற மாநிலங்களில் மகாராஷ்டிரம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஒட்டுமொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 42,004 தினக் கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் வேலையின்மை உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாடு முழுவதும் 2021-ல் மட்டும் வேலையின்மையால் 11,724 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் புள்ளி விவரங்களை மேற்கோள்காட்டி காங்கிரஸ் ட்வீட் செய்துள்ளது. குஜராத் மற்றும் ஹிமாசலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேலையின்மை உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி பிரசாரங்களில் ஈடுபட காங்கிரஸ் தற்போதே தயாராகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com