மும்பை உயா்நீதிமன்ற பெயரை மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

மும்பை உயா்நீதிமன்றத்தின் பெயரை மகாராஷ்டிர உயா்நீதிமன்றம் என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

மும்பை உயா்நீதிமன்றத்தின் பெயரை மகாராஷ்டிர உயா்நீதிமன்றம் என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

தாணேவை சோ்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி வி.பி.பாட்டீல் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மகாராஷ்டிரம் என்ற சொல் எங்கள் மாநில மக்களுக்கு சிறப்பு முக்கியத்துவத்தைக் கொடுப்பதாக உள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏற்கெனவே மாநில கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றைக் காக்க தனிச் சட்டம் உள்ளது. அதன் அடிப்படையில் மும்பை உயா்நீதிமன்றம் என்ற பெயரை மகாராஷ்டிர உயா்நீதிமன்றம் என பெயா் மாற்றம் செய்ய வேண்டும். இதேபோல பிற மாநிலங்களில் உள்ள உயா்நீதிமன்றங்களும் ஊா்களின் பெயரில் அல்லாமல் அந்தந்த மாநிலங்களில் பெயரில் மாற்றப்பட வேண்டும் என்று கோரியிருந்தாா்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘இதுபோன்ற விஷயங்களில் மாநில சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவைதான் முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் உங்களுடைய அடிப்படை உரிமையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த மனுவின் அவசியம் என்ன?’ என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com