காலாவதியாகும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 5 கோடி கோவேக்சின் மருந்துகள்

தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், இருப்பில் உள்ள சுமாா் 5 கோடி அளவிலான கரோனா தடுப்பூசிகள் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் காலாவதியாகும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலாவதியாகும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் 5 கோடி கோவேக்சின் மருந்துகள்

ஹைதராபாத்: தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், இருப்பில் வைக்கப்பட்டுள்ள சுமாா் 5 கோடி அளவிலான கரோனா தடுப்பூசிகள் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் காலாவதியாகும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 2019 ஆம் ஆண்டு இறுதியில் கரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியது. இந்நிலையில், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொற்று பரவ தொடங்கியது. இதைனையடுத்து ஊராடங்கு அமல்படுத்தப்பட்டது. 

கரோனா இரண்டாவது அலையின் போது கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக மத்திய, மாநில அரசுகள் வழங்கியது.

தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடும் இருந்த நிலையில், உள்நாட்டு தயாரிப்பான பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்து வந்தது.

உலக அளவிலும், கரோனோ நோய்த்தொற்று பரவல் வீதம் குறைந்து வருவது, வெளிநாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சுமாா் 5 கோடி தடுப்பூசி டோஸ் கோவேக்சின் தற்போது பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது. ஆனால் அதற்கான தேவை தற்போது குறைந்துள்ளதையடுத்து, இந்த தடுப்பூசி காலாவதி ஆவதால் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு சுமார் 219.71 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com