மோர்பி தொங்கு பாலம் மீண்டும் வேண்டும்: வலியுறுத்தும் மக்கள்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி 135 உயிர்களை பலி வாங்கிய தொங்கு பாலம், தங்களது மணிமகுடம் என்றும், அது மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்
மோர்பி தொங்கு பாலம் மீண்டும் வேண்டும்: வலியுறுத்தும் மக்கள்
மோர்பி தொங்கு பாலம் மீண்டும் வேண்டும்: வலியுறுத்தும் மக்கள்

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி 135 உயிர்களை பலி வாங்கிய தொங்கு பாலம், தங்களது மணிமகுடம் என்றும், அது மீண்டும் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மச்சு நதிக்கரைகளைத் தொட்டுக் கொண்டு பல மக்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்துக் கொணடிருக்கும் தொங்கு பாலத்தின் மிச்ச பாகங்களை நீக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.

இங்கு வசிக்கும் பலருக்கும், தொங்கு பாலம் என்பது தற்போது நினைவாகிப்போயிருக்கிறது. ஆனால், அது மீண்டும் நிஜத்துக்கு வர வேண்டும் என்பதே அவர்களது விருப்பமாக உள்ளது.

மோர்பி பாலம் எங்களது மணிமகுடம். எங்கள் நகரின் மிகப்பெரிய அடையாளம். வழக்கமாக இங்கு காணப்படும் இந்த தொங்கு பாலம் இல்லாமல், இப்பகுதியைக் கடந்து செல்லவே மனம் கனக்கிறது என்கிறார்கள் அப்பகுதிவாழ் மக்கள்.

நாங்கள் இந்த தொங்கு பாலத்துக்கு 50 காசு கட்டணம் செலுத்தும் நாளில் இருந்தே பாலத்தைக் கடந்து சென்று வருகிறோம். ஆனால் அது இன்று இங்கில்லை.

இது எந்த விதமான மதம் சம்பந்தப்பட்ட பகுதியாக இல்லாமல், பொதுவான அடையாளமாக விளங்கி வந்தது. பொதுமக்களின் பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுலா தளமாகவும் விளங்கி வந்தது.

யாருக்காவது சுற்றுலா செல்ல வேண்டும் என்றால் இங்குதான் வருவார்கள். குடும்பத்துடன் வெளியே செல்ல வேண்டுமா? செல்ஃபி எடுக்க வேண்டுமா இங்குதான் வருவார்கள். எங்கள நகரின் அடையாளம் இது.. என்கிறார்கள் கவலையோடு. மோர்பி 1 மற்றும் மோர்பி 2 என்ற எங்களது நகரின் இரண்டு பக்கங்களையும் இந்த பாலம் இணைத்து வந்தது. இது இல்லையென்றால், இரண்டு நகரங்களும் துண்டாகிவிடும்.

அந்தக் காலத்தில், இந்த மோர்பி பாலம் வழியாக குதிரையில் கூட வீரர்கள் சென்று வந்திருக்கிறார்கள் என்கிறார்கள் மிக மூத்த குடிமக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com