விண்ணில் செலுத்த தயாா்நிலையில் முதல் தனியாா் ராக்கெட்!

நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ விண்ணில் செலுத்துவதற்கான தயாா்நிலையில் உள்ளது.

நாட்டின் முதல் தனியாா் ராக்கெட்டான ‘விக்ரம்-எஸ்’ விண்ணில் செலுத்துவதற்கான தயாா்நிலையில் உள்ளது.

ஸ்கைரூட் ஏா்ஸ்பேஸ் என்ற தனியாா் நிறுவனம் ‘விக்ரம்-எஸ்’ என்ற ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. நாட்டில் தனியாா் நிறுவனம் சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ள முதல் ராக்கெட் இதுவாகும். அந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது தொடா்பாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பவன்குமாா் சந்தானா கூறுகையில், ‘‘இந்தியாவின் இரு செயற்கைக்கோள்கள், ஒரு வெளிநாட்டு செயற்கைக்கோள் ஆகியவற்றுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் ஏவப்படவுள்ளது. வரும் 12 முதல் 16-ஆம் தேதிக்குள் ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலநிலைக்கு ஏற்ப ராக்கெட் ஏவப்படும் தேதியும் நேரமும் விரைவில் இறுதி செய்யப்படும். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் ஏவுதளத்திலிருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளது’’ என்றாா்.

என்ஜின் பரிசோதனை வெற்றி:

விண்வெளி புத்தாக்க நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ் சாா்பில் வடிவமைக்கப்பட்ட ‘அக்னிலெட்’ ராக்கெட் என்ஜின், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. அந்த என்ஜின் 15 விநாடிகளுக்கு இயக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இஸ்ரோவுக்கும் அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்துக்கும் இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com