முடிவுக்கு வந்தது கென்யா ஏர்வேஸ் விமானிகளின் வேலைநிறுத்தம்!

கென்யா தேசிய விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள்  4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணியை இன்று தொடங்கியுள்ளனர். 
முடிவுக்கு வந்தது கென்யா ஏர்வேஸ் விமானிகளின் வேலைநிறுத்தம்!

கென்யா தேசிய விமான நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள்  4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தங்கள் பணியை இன்று தொடங்கியுள்ளனர். 

கென்யா ஏர்வேஸ் கரோனா தொற்று நோய்க்கு முன்னும், பின்னும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. எனவே ஓய்வூதிய சேமிப்பில் பணம் செலுத்த முடியாது என்று தெரிவித்த நிலையில், ஏர்வேஸ் விமானிகள் கடந்த 4 நாள்களாக பணியைப் புறக்கணித்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வேலை நிறுத்தம் செய்யும் விமானிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமான நிறுவனம் அச்சுறுத்தியது மற்றும் காலியிடங்களை விளம்பரப்படுத்தியது. 

வேலைநிறுத்த போராட்டத்தால் விமான நிறுவனத்துக்கு தினசரி  $2.4 மில்லியன் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிட்டுள்ளது.

இதையடுத்து, செவ்வாயன்று கென்யா ஏர்வேஸ் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்றதுடன், முடிந்தவரை குறுகிய காலத்தில் இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்த அனைத்து ஏற்பாடுகளும் செய்வோம் என்று எர்வேஸ் நிறுவனம் உறுதியளித்தது. 

ஓய்வூதிய சேமிப்பு நிதி தொடர்பான சர்ச்சையைத் தீர்க்கத் தவறியதைத் தொடர்ந்து, தங்கள் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற விமானிகளை மிரட்ட வேண்டாம் என்று கென்யா ஏர்வேஸுக்கு செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து கென்யா ஏர்வேஸ் விமானிகளின் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. நான்கு நாள்கள் வேலை நிறுத்தத்தால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com