தவறான அரசு ஆட்சிக்கு வந்தால் ஹிமாச்சலில் முன்னேற்றம் தடைப்படும்: ஜெ.பி.நட்டா

தவறான அரசு ஆட்சிக்கு வந்தால் ஹிமாசலப் பிரதேசத்தின் முன்னேற்றம் தடைப்படும்  என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தவறான அரசு ஆட்சிக்கு வந்தால் ஹிமாசலப் பிரதேசத்தின் முன்னேற்றம் தடைப்படும்  என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார். 

கட்சி வேட்பாளர் ராகேஷ் பதானியாவை ஆதரித்து ஒரு கூட்டத்தில் உரையாற்றிய நட்டா, 

பாஜக அரசால் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்ட அவர் அரசாங்கத்தைப் புதுப்பிப்பதற்கான சரியான நேரம் இதுதான். 

நல்ல தோட்டக்காரரைத் தேர்வு செய்யாவிட்டால், தோட்டம் பாழாகிவிடும். எந்தவித தூண்டிலுக்கும் மக்கள் விழ வேண்டாம் என்று எச்சரித்த அவர், தேர்தலுக்கு இன்னும் 2 நாள்கள் மட்டுமே உள்ளன. நீங்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். 

சாதி மற்றும் பிராந்திய அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்திய நட்டா, இந்த தேர்தல் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் உரிமைகளைப் பற்றியது. எனவே, உங்கள் வாக்கைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். 

அடல் சுரங்கப்பாதை மற்றும் லே ரயில் திட்டம் போன்ற பெரிய திட்டங்களை மத்தியிலும் மாநிலத்திலும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்கள் முடக்கிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சியால் இந்தத் திட்டங்கள் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மோடி அரசு ஆட்சிக்கு வந்த நிலையில், கிடப்பிலிருந்த அடல் சுரங்கப்பாதை திட்டம் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டது. 

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திட்டத்தால், மக்கள் தற்போது முகக்கவசம் அணியாமல் பேரணிகளில் அமர முடியும் என்பதை உறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com