ஹிமாசலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை 

ஹிமாசலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 
ஹிமாசலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு தடை 

ஹிமாசலில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. இதில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தோ்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிா்மோா் மாவட்டத்தில் 72.35 சதவீத வாக்குகள் பதிவாகின. அதையடுத்து உனா மாவட்டத்தில் 67.67 சதவீத வாக்குகளும், லஹால், ஸ்பிடி மாவட்டங்களில் 67.5 சதவீத வாக்குகளும், சொலான் மாவட்டத்தில் 68.48 சதவீத வாக்குகளும் பதிவாகின. பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக சிலாயில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. 

குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில் 55.40 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் போட்டியிடும் சுஜான்பூா் தொகுதியில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.  மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு தோ்தலின்போதும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், தற்போதைய தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் மீண்டும் பெரும்பான்மையாக வாக்களித்து அந்த வரலாற்றை மாற்றியமைப்பாா்கள் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்து வருகிறது. 

அதே வேளையில், பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் பஞ்சாப் பேரவைத் தோ்தலில் முத்திரை பதித்த ஆம் ஆத்மி கட்சியும் ஹிமாசல் தோ்தலில் போட்டியிடுகிறது. எனினும், அக்கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறுவது சந்தேகமே என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா். குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து, ஹிமாசல், குஜராத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் ஹிமாசலில் நவம்பர் 12ஆம் தேதி காலை 8 மணி முதல் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5.30 மணி வரை வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தவும், வெளியிடவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com