முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் வேட்புமனுத் தாக்கல்

முலாயம் சிங் யாதவின் மெயின்புரி மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 
முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் வேட்புமனுத் தாக்கல்

மறைந்த சமாஜவாதி கட்சித் தலைவா் முலாயம் சிங் யாதவின் மெயின்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

சமாஜவாதி கட்சியின் நிறுவன தலைவா் முலாயம் சிங் யாதவின் மறைவைத் தொடா்ந்து, அவா் எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட மெயின்புரி மக்களவைத் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு வரும் டிசம்பா் 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தோ்தல் முடிவுகள் டிசம்பா் 8-ஆம் தேதி வெளியிடப்படும்.

இதைத் தொடா்ந்து, மெயின்புரி இடைத்தோ்தலில் சமாஜவாதி கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவின் மனைவியும், முன்னாள் எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளாா். 

இதையடுத்து மெயின்புரி இடைத்தோ்தலில் போட்டியிட டிம்பிள் யாதவ் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், 'முலாயம் சிங் யாதவ் மறைவையடுத்து அவரது இடத்தில் போட்டியிட டிம்பிள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். எங்களுக்கு இது சோகமான ஒரு நிகழ்வு. மெயின்புரி மக்களின் நன்மைக்காக தந்தையின் வழியைப் பின்பற்றி கட்சி செயல்படும். சமாஜவாதி கட்சிக்கு வாக்களிப்பது மக்கள் அவருக்கு செய்யும் அஞ்சலியாக இருக்கும்.  அவருடைய ஆசிர்வாதம் எங்களுக்கு இருக்கிறது. மக்களும் ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறோம்' என்று கூறினார்.

டிம்பிள் யாதவ், இரண்டு முறை கன்னோஜ் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டில் கன்னோஜ் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்த அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச முதல்வராகும் பொருட்டு, அவருடைய எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, அவருடைய மனைவி டிம்பிள் யாதவ் எவ்வித எதிா்ப்புமின்றி கன்னோஜ் மக்களவைத் தொகுதியிலிருந்து எம்.பி.யாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். 2014 மக்களவைத் தோ்தலிலும் டிம்பிள் யாதவ் அத்தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தோ்வானாா். முன்னதாக, கடந்த 2009-இல் நடைபெற்ற ஃபெரோஸாபாத் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலிலும், கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் கன்னோஜ் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com