நண்பருக்குத்தான் முதலிடம், பிறகுதான் நாடு: யாரைத் தாக்குகிறார் கிரண் ரிஜிஜு

முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளன்று, அவரைத் தாக்கிப் பேசியிருக்கும் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, நேருவின் ஐந்து தவறுகள் என்று சில தகவல்களைக் குறிப்பிட்டு கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டுள்ளார்.
கிரண் ரிஜிஜு
கிரண் ரிஜிஜு


புது தில்லி: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளன்று, அவரைத் தாக்கிப் பேசியிருக்கும் மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, நேருவின் ஐந்து தவறுகள் என்று சில தகவல்களைக் குறிப்பிட்டு கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு, கிரண் ரிஜிஜு தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை தனது கருத்தினை பதிவிட்டிருந்தார்.

காஷ்மீர் விவகாரத்தில் நேருவின் 5 தவறுகள் என்று அறிக்கை வெளியிட்டிருந்த கிரண் ரிஜிஜு, இன்று அது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உண்மையில் என்ன நடந்தது? காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு, ஜவகர்லால் நேரு ஏன் காலதாமதம் செய்துவந்தார். அதனால்தான், காஷ்மீருக்குள் பாகிஸ்தான் ஊடுருவ நேரிட்டது? காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த 5 மிப்பெரிய தவறுகள்தான் இதன் பின்னணியில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்று மகாராஜா ஹரி சிங் மூன்று முறை வைத்த கோரிக்கைகளையும் நேரு நிராகரித்துவிட்டார். ஆரம்பகாலத்தில் காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த கொள்கைகள் அனைத்தும் நண்பர்தான் முதலில், பிறகுதான் நாடு என்பதையே தெளிவுபடுத்தியது என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com