கூலி கேட்ட சிறுமியை சிறு சிறு துண்டுகளாக்கிய கொடூரம்: 4 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி சிக்கியது எப்படி?

வேலை செய்ததற்கு கூலியைக் கேட்டு தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறி பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய குற்றவாளி சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார
கூலி கேட்ட சிறுமியை சிறு சிறு துண்டுகளாக்கிய  கொடூரம்: 4 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி சிக்கியது எப்படி?
கூலி கேட்ட சிறுமியை சிறு சிறு துண்டுகளாக்கிய கொடூரம்: 4 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி சிக்கியது எப்படி?

புது தில்லி: வேலை செய்ததற்கு கூலியைக் கேட்டு தொல்லை கொடுத்துவந்ததாகக் கூறி பழங்குடியினத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய குற்றவாளி சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷாலு டோப்னா என்ற 26 வயது குற்றவாளி, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி, கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு ரூ.50,000 பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரைப் பற்றி துப்புக் கிடைத்து அங்குச் செல்வதற்குள், குற்றவாளி தனது வசிப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அவர் இருக்கும் இடம் குறித்து தகவல் கிடைத்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், இறுதியாக கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த இந்தக் குற்றவாளியைப் பிடிக்க பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு, தொடர் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மற்றும் பிகாரைச் சேர்ந்த பெண்களை வீட்டு வேலைக்கு அழைத்துவந்து விடும் ஏஜென்ஸியில் பணியாற்றியதாகவும், கமிஷன் அடிப்படையில் அவ்வாறு பெண்களை அழைத்து வந்ததாகவும் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

அப்படி, 2015ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து ஒரு பெண்ணை வீட்டு வேலைக்கு அழைத்து வந்ததாகவும், மூன்று ஆண்டுகளுக்குப் பின், தனது கூலி ரூ.2 லட்சத்தைக் கொடுக்குமாறும், தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்றும் இல்லாவிட்டால் காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று சிறுமி கூறியதால், டோப்னோ சிறுமியைக் கொன்று, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, கழிவுநீர் கால்வாயில் வீசியது தெரிய வந்துள்ளது.

2018ஆம் ஆண்டு, மே மாதம் கழிவுநீர் கால்வாயில், மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின் டோப்னோ கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com