புதிதாக பண்ணை இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை: மஹிந்திரா அறிவிப்பு

மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா ஃபார்ம் எக்யூப்மென்ட் சர்வீசஸ் தனது முதல் பிரத்யேக பண்ணை இயந்திரங்கள் உற்பத்தி ஆலையை மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிதாம்பூரில் திறப்பதாக அறிவித்ததுள்ளது.
புதிதாக பண்ணை இயந்திரங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை: மஹிந்திரா அறிவிப்பு

மும்பை: மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியான மஹிந்திரா ஃபார்ம் எக்யூப்மென்ட் சர்வீசஸ், தனது முதல் பிரத்யேக பண்ணை இயந்திரங்கள் உற்பத்தி ஆலையை மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிதாம்பூரில் திறப்பதாக அறிவித்ததுள்ளது.

இந்தப் புதிய ஆலையை அறிமுகப்படுத்துவதன் மூலம், அதன் பண்ணை இயந்திர வணிகத்தை 5 ஆண்டுகளில் 10 மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா ஃபார்ம் எக்யூப்மென்ட் சர்வீசஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

23 ஏக்கர் பரப்பளவில் 1,200 கூட்டு அறுவடை இயந்திரங்கள் மற்றும் ஆண்டுக்கு 3,300 அரிசி மாற்று இயந்திரங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. அதே வேளையில், மாநிலத்தில் பண்ணை இயந்திரங்களுக்கு ஒரு மிகப்பெரிய மையம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"உள்நாட்டு சந்தை தேவையை பூர்த்தி செய்வதோடு, ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள உலகளாவிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களும் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

புதிய ஆலையானது பின்லாந்து, ஜப்பான் மற்றும் துருக்கியில் உள்ள மஹிந்திராவின் உலகளாவிய தொழில்நுட்ப மையங்களில் வடிவமைக்கப்படும் புதிய தயாரிப்புகளை வெளியிடும் திறன் படைத்தது.

பண்ணை இயந்திரங்கள் வணிகத்தை 5 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பதை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இந்த உத்தியை செயல்படுத்துவதில் பிதாம்பூரில் உள்ள புதிய பண்ணை இயந்திர ஆலை ஒரு முக்கியத் தூணாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com