
உத்தரகண்டிலும் ராகிங் கொடுமை: 7 எம்பிபிஎஸ் மாணவர்கள் இடைநீக்கம்
டேஹ்ராடூன்: 40 மாணவர்களை ராகிங் செய்த குற்றச்சாட்டின் கீழ், 7 எம்பிபிஎஸ் மாணவர்கள் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரகண்டில் உள்ள ஸ்ரீநகர் மருத்துவக் கல்லூரியில் 40 மாணவர்களை ராகிங் செய்த விவகாரம், ஒரு மாணவரின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது.
இதையும் படிக்க.. ஷ்ரத்தாவின் உடல் பாகங்கள் இருக்கும்போதே வீட்டுக்கு பெண்களை அழைத்து வந்த குற்றவாளி
நவம்பர் 11ஆம் தேதி இரவு, எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்களை, முகமூடி அணிந்து கொண்டு வந்த மூத்த எம்பிபிஎஸ் மாணவர்கள் 7 பேர், மாடியில் தள்ளி, கதவை சாத்தியுள்ளனர். நள்ளிரவில் நடுங்கும் குளிரில் மாணவர்கள் இருந்துள்ளனர்.
இது குறித்து மறுநாளே பெற்றோர் அளித்த புகாரினைத் தொடர்ந்து மற்ற மாணவர்களும் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய கல்லூரி நிர்வாகம், இதில் தொடர்புடைய 7 எம்பிபிஎஸ் மாணவர்களை கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க.. போலி புற்றுநோய் மருந்து மோசடி: புற்றுநோயை விடவும் ஆபத்தான குற்றவாளிகள்
ஏற்கனவே, வேலூரில் எம்பிபிஎஸ் மாணவர்கள் ராகிங் செய்த கொடுமை வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இதுவும் தற்போது வைரலாகியிருக்கிறது.