டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம்: டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ்

இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துடன் புதிதாக 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக டிவிஎஸ் சப்ளை செயின் சொலியூஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துடன் புதிதாக ஒப்பந்தம்: டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ்


புதுதில்லி: இங்கிலாந்தைச் சேர்ந்த டென்னிஸ் ஈகிள் நிறுவனத்துடன் புதிதாக 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளதாக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒப்பந்தத்தின் நீட்டிப்பு மூலம், டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் - யுகே பிரிவு, சந்தைக்குப் பிறகான சேவை மற்றும் உதிரி பாகங்களை டென்னிஸ் ஈகிள் நிறுவனத்திற்கு வழங்கும்.

கடந்த 16 ஆண்டுகளாக டென்னிஸ் ஈகிள் உடனான தங்களது வலுவான உறவும், இந்த ஒப்பந்தத்தின் நீட்டிப்பும், செயல்பாட்டுத் திறன் மற்றும் ஒத்துழைப்பு அடிப்படையிலான அணுகுமுறையின் மூலம் வாடிக்கையாளர்களின் வணிகத் தேவைகளை சீரமைப்பதற்கான தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்று டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக இயக்குநர் ரவி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

டிவிஎஸ் மொபிலிட்டி குழுமத்தின் ஒரு பகுதியான டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ்  - யுகே பிரிவு தயாரிப்பு, தரவு மேலாண்மை போன்ற பல்வேறு சேவைகளை டென்னிஸ் ஈகிளுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com