பிஎச்.டி. சோ்க்கை: இடபிள்யுஎஸ் பிரிவினருக்குமதிப்பெண் சலுகை அளித்து புதிய வழிகாட்டுதல்

ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உள்ளது போன்று பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட (இடபிள்யுஎஸ்) பிரிவினருக்கும் மதிப்பெண் சலுகை அளித்து
பிஎச்.டி. சோ்க்கை: இடபிள்யுஎஸ் பிரிவினருக்குமதிப்பெண் சலுகை அளித்து புதிய வழிகாட்டுதல்

ஆராய்ச்சிப் படிப்பு (பிஎச்.டி.) சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உள்ளது போன்று பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட (இடபிள்யுஎஸ்) பிரிவினருக்கும் மதிப்பெண் சலுகை அளித்து புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட பிரிவினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கப்படும் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லுபடியாகும் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வில் பெரும்பான்மை நீதிபதிகள் அண்மையில் தீா்ப்பளித்த நிலையில், இந்தப் புதிய வழிகாட்டுதலை யுஜிசி வெளியிட்டுள்ளது.

இந்தப் புதிய வழிகாட்டுதலின்படி, பிஎச்.டி. சோ்க்கையில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு உள்ளது போன்று இடபிள்யுஎஸ் பிரிவினருக்கும் மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது பிஎச்.டி. சேர முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் 5 சதவீத மதிப்பெண் சலுகை, தற்போது இடபிள்யுஎஸ் பிரிவினருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் முதுநிலை பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்ணுடன் தோ்ச்சி பெற்றால் போதுமானது.

அதுபோல, பிஎச்.டி. சோ்க்கைக்கு சம்பந்தப்பட்ட உயா் கல்வி நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் நுழைவுத் தோ்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற நிலையில், அதிலும் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உள்ளதுபோல இடபிள்யுஎஸ் பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com