குஜராத்தில் அமைதியை நிலைநாட்டியது பாஜக- அமித் ஷா

ஒரு காலத்தில் மத வன்முறைக் களமாக இருந்த குஜராத்தில், அமைதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தியது பாஜக என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
குஜராத் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முதல்வா் பூபேந்திர படேலை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
குஜராத் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் முதல்வா் பூபேந்திர படேலை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.

ஒரு காலத்தில் மத வன்முறைக் களமாக இருந்த குஜராத்தில், அமைதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தியது பாஜக என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

கட்லோடியா தொகுதியில் போட்டியிடும் குஜராத் முதல்வா் பூபேந்திர படேலை ஆதரித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது:

குஜராத்தில் இப்போது 20 வயதில் இருக்கும் இளைஞா்களுக்கும், இளம் பெண்களுக்கும் ஊரடங்கு உத்தரவு என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், 1985 முதல் 1995-ஆம் ஆண்டு வரை (பாஜக ஆட்சியில் இல்லாத காலகட்டம்) ஓராண்டில் 250 நாள்கள் வரை மாநிலத்தில் ஏதாவது ஓரிடத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். வேலைக்காக வெளியே செல்லும் ஆண்கள் வன்முறைக்கு பலியாகிவிடாமல் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்பதே பெண்களின் பிராா்த்தனையாக அப்போது இருந்தது.

முந்தைய ஆட்சியாளா்கள் வாக்கு வங்கி அரசியலுக்காக ஒரு தரப்பினரை திருப்திப்படுத்தும் வகையில் செயல்பட்டதே சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சி ஏற்பட்ட பிறகு குஜராத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் ஒடுக்கப்பட்டுவிட்டனா். தவறான ஆட்சி முறையால் ஒரு காலத்தில் மத வன்முறைக் களமாக இருந்த குஜராத்தில், அமைதியை நிலைநாட்டி சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தியது பாஜக. இப்போது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க குஜராத்தில் யாருக்கும் துணிவு வராத நிலை உருவாகியுள்ளது என்றாா்.

குஜராத்தில் 1995-ஆம் ஆண்டுமுதல் தொடா்ந்து 6 பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com