பிகாரில் அறுவை சிகிச்சையே செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க நேரிடுமோ?

அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிகாரில் அறுவை சிகிச்சையே செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க நேரிடுமோ?
பிகாரில் அறுவை சிகிச்சையே செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க நேரிடுமோ?

பாட்னா: பிகாரில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணின் இரண்டு சிறுநீரகங்களும், அவரது அனுமதியின்றி அகற்றப்பட்ட நிலையில், அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் 24 பெண்களுக்கு மயக்க மருந்தே கொடுக்காமல் குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிகார் மாநிலம் ககாரியாவில் உள்ள இரண்டு ஆரம்ப சுகாதார மையங்களில், கடந்த வார இறுதியில், கிராமத்தில் முகாம்கள் நடத்தி, சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய அழைக்கப்பட்டனர்.

ஆனால், அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில், மயக்க மருந்து எதுவும் அவர்களுக்கு வழங்கப்படாமல், துடிக்க துடிக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல்கள் சுகாதாரத் துறைக்குத் தெரிய வந்ததும், பாதிக்கப்பட்ட பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர்கள் கூறுகையில், அறுவை சிகிச்சை செய்யும் போது நான் கண்முடித்துக் கொண்டிருந்தேன். கத்தியை வயிற்றில் வைத்ததும், நான் வலியால் கத்தினேன். நான்கு பேர் என் கை மற்றும் கால்களை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். நான் வலியால் துடித்துக் கொண்டே, கத்திக் கொண்டிருக்கும் போது, மருத்துவர் அறுவை சிகிச்சையை செய்து முடித்தார். பிறகு எனக்கு ஏதோ ஊசி போடப்பட்டு வலி குறைந்தது என்கிறார் அந்த வலி தந்த வேதனையை மறக்க முடியாமல்.

இதுபோல அன்றைய மோசமான நாளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு வலியால் துடித்த பெண்கள், தங்களுக்கு நேர்ந்த கொடுமையை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ஒருவர் இது பற்றி கூறுகையில், அனைவருக்கும் மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், சில பெண்களுக்கு அது மயக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. ஒவ்வொரு பெண்களுக்கும், மிகச் சரியான அளவிலேயே மயக்க மருந்து வழங்கப்பட்டது. பெண்களின் உடல் அமைப்பைப் பொருத்து அது மாறுபடும், செயல்படும் விகிதம் மாறுபடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் தன்னார்வ அமைப்பான குளோபல் டெவலப்மெண்ட் தன்னார்வ அமைப்புக்கு மாநில அரசு சார்பில் ரூ.2100 அளிக்கப்படுகிறது. விசாரணையில் தவறு உறுதி செய்யப்பட்டதும், இந்த அமைப்பு கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com