குஜராத் தேர்தல்: நாளை மறுநாள் பேரணியில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் ( நவம்பர் 21) குஜராத்தின் சூரத் நகரில் இரண்டு பேரணிகளில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் தேர்தல்: நாளை மறுநாள் பேரணியில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மறுநாள் ( நவம்பர் 21) குஜராத்தின் சூரத் நகரில் இரண்டு பேரணிகளில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூரத் நகரில் உள்ள ராஜ்காட் மற்றும் மஹூவா ஆகிய இடங்களில் இந்தப் பேரணி நடைபெற உள்ளது. 

மகாராஷ்டிரத்தில் பாரதத்தை இணைப்போம் ஒற்றுமை நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி, நாளை ( நவம்பர் 20) மத்தியப் பிரதேசத்தில் அந்தப் பயணத்தை தொடங்க உள்ளார். இந்த நிலையில் நாளை மறுநாள் சூரத் நகரில் நடைபெறும் இரண்டு பேரணிகளில் கலந்து கொள்வார் என குஜராத் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து காங்கிரஸ் பொறுப்பாளர் ரகு சர்மா கூறியிருப்பதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாரதத்தை இணைப்போம் ஒற்றுமைப் பயணத்தில் இதுவரை 2000 கிலோ மீட்டர் நிறைவு செய்துள்ளார். அவர் நாளை மறுநாள் (நவம்பர் 21) குஜராத்துக்கு வருகை தரவுள்ளார் என்றார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக 7வது முறையாக மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதேபோல புதிய போட்டியாளராக ஆம் ஆத்மி மாநிலத்தில் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறது. இதனால், பல ஆண்டுகளாக பாஜக காங்கிரஸிடையே நிலவி வந்த இருமுனைப் போட்டி தற்போது மும்முனைப் போட்டியாக மாறியுள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வருகிற டிசம்பர் 8 அன்று அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com