ஆக்ரா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்!

ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
ஆக்ரா செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஜாக்பாட்!


நவம்பர் 19 ஆம் தேதி முதல் 25 வரை உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறையால் பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களை சனிக்கிழமை(நவ.19) சுற்றுலாப் பயணிகள் கட்டணமின்றி சுற்றிப்பார்க்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்ராவின் தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, ஃபதேபூர் சிக்ரி மற்றும் பிற நினைவுச் சின்னங்களை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை (நவ.19) கட்டணமின்றி இலவசமாக பார்வையிடலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.

ஆனால், தாஜ்மகால் வளாகத்திற்குள் நுழைவு கட்டணம் மட்டும்தான் இலவசம். அதேவேளையில், தாஜ்மஹாலின் நடுவில் இருக்கும் முக்கிய பகுதிக்கு நுழைவதற்கு சுற்றுலாப் பயணிகள் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கு சில நூறுகள் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதால், இந்தப் பகுதிக்கு ஒரு நாள் சுற்றுலாப் பயணத்தைத் திட்டமிட்டிருப்பவர்களும், சுற்றுலா செல்பவர்களுக்கும் இது நிச்சயம் ஒரு ஜாக்பாட் தான்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com