ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு ரூ.4.78 லட்சம் கடன் வழங்குகிறதா மத்திய அரசு?

நாட்டில் ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு தலா 4,78,000 ரூபாயை மத்திய அரசு கடனாக வழங்கவிருப்பதாக சமூக ஊடங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்று பிஐபி விளக்கம் அளித்துள்ளது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு லட்சக்கணக்கில் கடன் வழங்கவிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இணைத்து சமூக ஊடகங்களில் புரளி ஒன்று மிக வேகமாகப் பரவி வந்தது.

இதில் துளியும் உண்மையில்லை என்று பிஐபி அறிவித்துள்ளது. தவறான தகவல் இணையதளங்களில் பரவி வருவதாகவும், அது உண்மையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தயவுகூர்ந்து இதுபோன்ற பொய்யான தகவல்களை மக்கள் யாரும் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என்றும், இதுபோன்ற புரளிகளைப் பரப்புவதும் குற்றம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற புரளிகள் பரவும் போது, இதனை உண்மை என நம்பும் மக்கள், மத்திய அரசு வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறினால் அப்படி மக்கள் தங்களது ஆதார் உள்ளிட்ட விவரங்களை அளித்து ஏமாறும் அபாயம் இருப்பதால், புரளிகளைப் பரப்புவதும் யாரேனும் தொலைபேசி வாயிலாக அழைத்தால் அவர்களிடம் ஆதார் எண் உள்ளிட்ட எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

பிஐபியின் உண்மை அறியும் சமூக ஊடகப் பக்கம், இதுபோன்று பரவும் தவறான தகவல்கள் குறித்து விளக்கங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறது. இதுபோன்ற ஒரு தகவல் கடந்த ஆகஸ்ட் மாதமும் பரவியது. அப்போதும் இந்தப் பக்கத்தில் அதுபொய்யானது என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. தற்போதும் இது குறித்து பதிவிட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com