அசாமில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 5 பேர் கைது!

அசாமில் இருவேறு சம்பவங்களில் கச்சார் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை அசாம் போலீசார் கைப்பற்றியதோடு, இதுதொடர்பாக 5 பேர் கைது செய்துள்ளனர். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அசாமில் இருவேறு சம்பவங்களில் கச்சார் மற்றும் கர்பி அங்லாங் மாவட்டங்களில் இருந்து பல கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை அசாம் போலீசார் கைப்பற்றியதோடு, இதுதொடர்பாக 5 பேர் கைது செய்துள்ளனர். 

கச்சார் மாவட்டத்தில் லக்கிபூர் பகுதியில் 1.80 லட்சம் மாத்திரைகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் மதிப்பு சுமார் ரூ.50 கோடி என போலீசார் தெரிவித்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்துல் சயீத், இபாஸூர் ரஹ்மான் மற்றும் சமீர் ஆலம் என அடையாளம் காணப்பட்டனர், அவர்கள் அனைவரும் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இது குறித்து கச்சார் காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹதோ கூறுகையில், 

இந்த 3 பேரும் லாரியில் மாத்திரைகள் கடத்தி வந்தனர். வாகனத்தின் கேரியரில் கட்டப்பட்டிருந்த ரகசிய அறையில் போதைப்பொருள் கடத்தப்பட்டது. குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் வாகனம் மற்றும் மாத்திரைகளைச் சோதனை செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

முதற்கட்ட விசாரணையில், அப்துல் சயீத் அண்டை மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் இருந்து மாத்திரைகளைக் கொண்டு வந்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார். 

இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

மற்றொரு சம்பவத்தில், கர்பி அங்லாங் மாவட்டத்தில் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு குவிண்டால் கஞ்சாவை காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் கூட்டு நடவடிக்கையில் லாரியை மறித்து பறிமுதல் செய்தனர். இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com