ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் அடுத்தது எந்த மாநிலத்தில்?

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது, மகாராஷ்டிரத்திலிருந்து அடுத்து மத்தியப் பிரதேசத்துக்குள் நுழையவிருக்கிறது.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் அடுத்தது எந்த மாநிலத்தில்?
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் அடுத்தது எந்த மாநிலத்தில்?


புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணமானது, மகாராஷ்டிரத்திலிருந்து அடுத்து மத்தியப் பிரதேசத்துக்குள் நுழையவிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்று வரும் ஒற்றுமை நடைப்பயணம், புதன்கிழமையன்று மத்தியப் பிரதேசத்தில் இருந்து நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து ஆறு மாநிலங்களில் நிறைவடைந்து, மத்தியப் பிரதேசத்துக்குள் நடைப்பயணக் குழுவினர் வருவதற்கு முன்பு, மகாராஷ்டிரத்தின் ஜல்கோன் மாவட்டத்தில் இரண்டு நாள்கள் ஓய்வெடுப்பார்கள் எனறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் குழுவினர் மகாராஷ்டிர மாநிலம் நிம்கேதி அருகே இரண்டு நாள்கள் ஓய்வெடுப்பார்கள். இன்றும் நாளையும் அவர்களுக்கு ஓய்வு நாளாக இருக்கும். புதன்கிழமை அதிகாலை, நடைப்பயணம் மேற்கொண்டிருக்கும் குழுவினர் மத்தியப் பிரதேசம் நோக்கிப் புறப்படுவார்கள்.

இந்த ஓய்வு நாள்களிலும் கூட, ராகுல் காந்தி தேர்தல் நடைபெறவிருக்கும் குஜராத்தில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com