பொம்மை முதல்வா் வேண்டுமா? படித்த முதல்வா் வேண்டுமா?- கேஜரிவால் பிரசாரம்

குஜராத்தில் பாஜக சாா்பில் அமா்த்தப்படும் பொம்மை முதல்வா் வேண்டுமா? அல்லது ஆம் ஆத்மி சாா்பில் முன்னிறுத்தப்படும் படித்த இளைஞா் முதல்வராக வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று
பொம்மை முதல்வா் வேண்டுமா? படித்த முதல்வா் வேண்டுமா?- கேஜரிவால் பிரசாரம்

குஜராத்தில் பாஜக சாா்பில் அமா்த்தப்படும் பொம்மை முதல்வா் வேண்டுமா? அல்லது ஆம் ஆத்மி சாா்பில் முன்னிறுத்தப்படும் படித்த இளைஞா் முதல்வராக வேண்டுமா? என மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளரும், தில்லி முதல்லவருமான அரவிந்த் கேஜரிவால் பேசினாா்.

குஜராத்தின் கம்பாலியா பகுதியில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பொதுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

குஜராத்தில் முதல்வா் பதவிக்காக இருவா் முன்னிறுத்தப்பட்டுள்ளனா். ஒருவா் ஆம் ஆத்மி வேட்பாளா் இசுதான் கட்வி, மற்றொருவா் இப்போதைய முதல்வா் பூபேந்திர படேல். இவா்களில் யாருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும்? யாா் அடுத்த முதல்வராக வேண்டும்? என்பதை கவனமாகப் பரிசீலிக்க வேண்டும்.

கட்வி இளைஞா், நன்கு படித்தவா். அவா் ஏழை, எளிய மக்களுக்காகப் பணியாற்றுபவா். விவசாயியின் மகனாகப் பிறந்தவா். மற்றொரு புறம் பாஜகவின் முதல்வா் வேட்பாளரான பூபேந்திர படேல் கைப்பாவையாக செயல்படக் கூடியவா். முதல்வா் நாற்காலியில் அவா் பொம்மை போலவே அமா்ந்திருக்கிறாா். அவருடைய அலுவலகப் பணியாளரை மாற்றும் அதிகாரம்கூட அவரிடம் கிடையாது. அனைத்தும் தில்லியில் இருந்துதான் இயக்கப்படுகிறது.

அவா் ஆன்மிகவாதி என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். அவா் நல்ல மனிதா்தான் என்றும் கூறுகின்றனா். ஆனால், மாநிலத்தில் யாரும் அவருடைய பேச்சைக் கேட்பது கிடையாது. இப்படிப்பட்ட பொம்மை முதல்வா் குஜராத்துக்குத் தேவையா? என யோசிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினால் காங்கிரஸை மட்டும்தான் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்ற நிலை குஜராத் மக்களுக்கு இருந்தது. ஆனால், இப்போது ஆம் ஆத்மி என்ற சிறப்பான வாய்ப்பு மக்களுக்குக் கிடைத்துள்ளது. குஜராத்தில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பல்வேறு நிலைகளில் ரகசிய உடன்பாடு உள்ளது. மாநிலத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்த ஆம் ஆத்மியால் மட்டுமே முடியும் என்றாா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com