நாட்டின் நடுப்பகுதிக்குள் நுழைந்தது ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்! கெத்து காட்டிய காங்கிரஸ்

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாட்டின் நடுப்பகுதியான மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது.
நாட்டின்  நடுப் பகுதிக்குள் நுழைந்தது ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்
நாட்டின் நடுப் பகுதிக்குள் நுழைந்தது ராகுலின் ஒற்றுமை நடைப்பயணம்

போபால்: மகாராஷ்டிரத்தின் முக்கிய இடங்களில் நடைப்பயணத்தை நிறைவு செய்துகொண்டு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நாட்டின் நடுப்பகுதியான மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்துள்ளது.

தமிழகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம் என பல்வேறு மாநிலங்களைக் கடந்திருக்கும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் முதல் முறையாக, ஹிந்தி அதிகம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலத்துக்குள் அடியெடுத்து வைக்கிறது.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமை நடைப்பயணம் இன்று 77வது நாளாக மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை, நடைப்பயணம் வந்தடைந்தபோது, அதுவரை மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் வைத்திருந்த இந்திய ஒற்றுமை நடைப்பயணக் கொடியை அவர் கமல் நாத்திடம் ஒப்படைத்தார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் 70 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் புர்ஹான்பூர் வந்திருந்த கமல்நாத், கொடியைப் பெற்றுக் கொண்டார். ராகுல் மற்றும் நடைப்பயணக் குழுவினருக்கு லட்சக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். 

மத்தியப் பிரதேசத்தில் புர்ஹான்பூரில் நடைபெறும் இந்த நடைப்பயணத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா சோப்ரா, அவரது கணவர் மற்றும் பிள்ளைகளும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com