மீரட்டை ‘நாதுராம் கோட்சே நகர்’ எனப் பெயர் மாற்றுவோம்: இந்து மகாசபை

மீரட் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டை நாதுராம் கோட்சே எனப் பெயர் மாற்றுவோம் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட்டை ‘நாதுராம் கோட்சே நகர்’ எனப் பெயர் மாற்றுவோம்: இந்து மகாசபை

மீரட் மேயர் தேர்தலில் வெற்றி பெற்றால் மீரட்டை நாதுராம் கோட்சே எனப் பெயர் மாற்றுவோம் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வருகின்ற டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் போட்டியிடவுள்ள வலதுசாரி கட்சியான இந்து மகாசபை தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், ஹிந்து தேசத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் பேசிய இந்து மகாசபையின் தேசிய துணைத் தலைவர் பண்டித் அசோக் சர்மா கூறியதாவது:

மீரட் உள்ளாட்சித் தேர்தலில் மேயருக்கு தேவையான இடங்களை இந்து மகாசபை கைப்பற்றும் பட்சத்தில், மீரட் நகரின் பெயரை நாதுராம் கோட்சே நகர் என மாற்றுவோம். மேலும், இஸ்லாமிய பெயர்கள் கொண்ட நகரங்கள் மற்றும் மாவட்டங்களின் பெயர்களை ஹிந்து தலைவர்களின் பெயர்களாக மாற்றுவோம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்து மகாசபையின் மீரட் மாவட்ட தலைவர் அபிஷேக் அகர்வால், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதமாற்றம் மற்றும் இஸ்லாமிய அரசியலை தடுத்து நிறுத்துவோம்” எனப் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com