பிரதமரின் அனைத்து நியமனங்களும் அரசியலமைப்பை கிழிக்கிறது: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் நியமனங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அரசியலைமைப்பை கிழிப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பிரதமரின் அனைத்து நியமனங்களும் அரசியலமைப்பை கிழிக்கிறது: காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியின் நியமனங்கள் மற்றும் முடிவுகள் அனைத்தும் அரசியலைமைப்பை கிழிப்பதாக காங்கிரஸ் சார்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அவசரகதியாக தேர்தல் ஆணையரை நியமித்ததற்கு மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் காங்கிரஸ் இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இது குறித்து அனைத்திந்திய காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளர் பவன் கீரா ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: இது ஒன்றும் புதிதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து நியமனங்களும், நியமன முடிவுகளும் அரசியலமைப்பை கிழிக்கும் விதமாகவே உள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.

அருண் கோயல் அவசரகதியாக தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது ஏன் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

இது குறித்து நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு கூறியதாவது: இது எந்த வகையிலான மதிப்பீடு? நாங்கள் அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு தகுதியானவரா என்பது குறித்து கேட்கவில்லை. அருண் கோயல் எந்த செயல்முறையில் குறுகிய இடைவெளியில் தேர்தல் ஆணையராக எப்படி நியமிக்கப்பட்டார் என்பது குறித்தே கேட்கிறோம் என்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com