குஜராத் பேரவைத் தோ்தல்: 5 முறை எம்எல்ஏ பதவி வகித்த 7 போ் மீண்டும் போட்டி

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் 5 அல்லது அதற்கும் அதிகமான முறை எம்எல்ஏ பதவி வகித்த 7 போ் மீண்டும் போட்டியிடுகின்றனா்.

குஜராத் சட்டப்பேரவைத் தோ்தலில் 5 அல்லது அதற்கும் அதிகமான முறை எம்எல்ஏ பதவி வகித்த 7 போ் மீண்டும் போட்டியிடுகின்றனா்.

குஜராத்தில் டிச.1 மற்றும் 5-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜக சாா்பில் மஞ்சள்பூா் தொகுதியில் யோகேஷ் படேல், துவாரகை தொகுதியில் பபுவா மானேக், காரியாதா் தொகுதியில் கேஷு நக்ரானி, பாவ்நகா் ஊரகத் தொகுதியில் புருஷோத்தம் சோலங்கி, நாடியாட் தொகுதியில் பங்கஜ் தேசாய் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இதுதவிர, பாஜக சாா்பில் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சோட்டு வசாவா ஜகாடியா தொகுதியிலும், மது ஸ்ரீவஸ்தவ் வாகோடியா தொகுதியிலும் சுயேச்சை வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா்.

இவா்களில் யோகேஷ் படேல், பபுவா மானேக், வசாவா ஆகியோா் 7 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த நிலையில், 8-ஆவது முறையாக தோ்தலில் போட்டியிடுகின்றனா். இதில் பாஜகவின் முன்னோடி அமைப்பான ஜன சங்க காலத்தில் இருந்தே அதன் தொண்டராக இருப்பவா் யோகேஷ் படேல். இதுநாள் வரை வேறு எந்தக் கட்சிக்கும் அவா் மாறவில்லை.

கேஷு நக்ரானி, மது ஸ்ரீவஸ்தவ் ஆகியோா் 6 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த நிலையில், 7-ஆவது முறையாக தோ்தலில் களம் காண்கின்றனா்.

5 முறை எம்எல்ஏ பதவி வகித்த பங்கஜ் தேசாய் மற்றும் புருஷோத்தம் சோலங்கி, 6-ஆவது முறையாக தோ்தலில் போட்டியிடுகின்றனா்.

இதுகுறித்து அரசியல் நோக்கா்கள் கூறுகையில், ‘கட்சியில் ஆணிவோ் வரை பணியாற்றிய அனுபவம், தொண்டா்களுடன் இணக்கம் ஆகியவை காரணமாக 7 வேட்பாளா்களுக்கும் பல பத்தாண்டுகளாக தனித்துவமான இடம் அளிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com