கர்நாடகம்-மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பாஜக - பாஜக இடையே வார்த்தைப் போர்

கர்நாடகம் - மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே பல காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை, பாஜகவுக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகம்-மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பாஜக - பாஜக இடையே வார்த்தைப் போர்
கர்நாடகம்-மகாராஷ்டிர எல்லைப் பிரச்னை: பாஜக - பாஜக இடையே வார்த்தைப் போர்


பெங்களூரு: கர்நாடகம் - மகாராஷ்டிரம் மாநிலங்களுக்கு இடையே பல காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை, பாஜகவுக்கு மிகவும் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக இவ்விரு மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் பாஜக ஆட்சி நடந்து வந்தால், மற்றொரு மாநிலத்துடன் சப்தமாக சண்டைப் போடலாம். ஆனால் இரு மாநிலங்களிலும் தற்போது பாஜக ஆட்சிதான் நடக்கிறது.

அதற்காக சும்மா விட்டுவிட முடியுமா? கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிர துணை முதல்வர் ஃபட்னவீஸ் இடையே வார்த்தைப் போர் மூண்டுள்ளது.

மகாராஷ்டிரத்தின் எந்தவொரு கிராமமும் அண்மையில் கர்நாடகத்துடன் இணைக்கப்படவில்லை என்று ஃபட்னவீஸ் கூறியிருந்தார். மேலும், எல்லையோரத்தில் இருக்கும் எந்த ஒரு கிராமத்துக்கும் தற்போது எங்குச் செல்வது என்ற நிலை இல்லை என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த பசவராஜ் பொம்மை, பாஜக தலைவரின் கருத்து ஆத்திரமூட்டுவதாகவும், அவரது கனவு ஒரு போதும் நிறைவேறாது என்றும் தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூரில் இருக்கும் ஒரு சில பகுதிகளில் கன்னடம் பேசுபவர்கள்தான் அதிகம் இருப்பதாகவும் அவற்றை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டும் என்றும் பசவராஜ் பொம்மை வலியுறுத்தி வருகிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com