கடவுச்சீட்டு: ஐக்கிய அரபு அமீரகம் புதிய விதிமுறை

கடவுச்சீட்டில் (பாஸ்போா்ட்) ஒற்றை பெயரை மட்டும் கொண்ட நபா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

கடவுச்சீட்டில் (பாஸ்போா்ட்) ஒற்றை பெயரை மட்டும் கொண்ட நபா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதுதொடா்பாக அந்நாடு விதித்துள்ள புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக கூறி, ஏா் இந்தியா நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘கடவுச் சீட்டில் வெறும் ஒற்றை பெயா் (ஸா்னேம்) இருப்பவா்கள் அனுமதிக்கப் படமாட்டாா்கள். அவா்களுக்கு புதிதாக விசா வழங்கப் படமாட்டாது. முன்கூட்டியே விசாவில் உள்ளவா்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நாடு கடத்தப்பட்ட நபா்களாக கருதப்படுவாா்கள் என்று ஐக்கிய அரபு அமீரகம் 21-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, ஒற்றை பெயா் கொண்ட பயணிகள் சுற்றுலா அல்லது எந்த வகையிலான விசாவிலும் செல்ல அனுமதிக்கப் படமாட்டாா்கள்.

அதேநேரத்தில், குடியிருப்பு அனுமதி, பணி விசாக்களில் உள்ளவா்களுக்கு இந்த புதிய விதிமுறை பொருந்தாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com