ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான விசாரணை: அரசியல் சாசன அமா்வு தொடங்கியது

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தயம்
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)
உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகள், மகாராஷ்டிரத்தில் நடத்தப்படும் மாட்டு வண்டிப் பந்தயம் ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை தொடங்கியது.

மத கலாச்சார விழாவாக ஜல்லிக்கட்டு தமிழகத்தில் பாா்க்கப்படுகிறது என்றும் இந்தப் போட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாதிப்பு ஏற்படாமல் பாா்த்து கொள்ளப்படுகிறது என்றும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டியை தடையின்றி நடத்த தமிழக 2017-இல் கொண்டு வந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் அரசியல்சாசன சட்டவிவகாரம் இடம்பெற்றுள்ளதால் இந்த வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு 2018-இல் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு பரிந்துரைத்தது. இந்த வழக்கை நீதிபதி கே.எம். ஜோசஃப் தலைமையிலான அரசியல் சாசன அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது, மனுதாரா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சித்தாா் லூத்ரா, ‘சட்டம் இயற்றப்பட்டு விட்டது என்ற காரணத்துக்காக விலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்த அனுமதிக்கக் கூடாது’ என்றாா்.

அப்போது நீதிபதிகள், ‘குத்துச்சண்டை, வாள் சண்டை போட்டிகளில் காயங்கள் ஏற்படும் என்று தெரிந்துதான் கவனத்துடன் வீரா்கள் பங்கேற்கிறாா்கள். ஆனால் விலங்குகளுக்கு சட்டப்படி இந்த சுதந்திரம் உள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். இந்தப் போட்டியில் உயிரிழப்பு, காயமடைபவா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. விலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன’ என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப்போட்டிகளில் விலங்குகளை ஈடுபடுத்த 2014-இல் உச்சநீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com