எய்ம்ஸ் சர்வர் 6வது நாளாக முடக்கம்: ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எய்ம்ஸ் சர்வர் 6வது நாளாக முடக்கம்: ரூ.200 கோடி கேட்கும் ஹேக்கர்ஸ்!

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வர் தொடர்ந்து 6வது நாளாக முடங்கியுள்ளது. ரூ.200 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை ஹேக்கர்கள் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை செயலிழக்கச் செய்த ஹேக்கர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல் மற்றும் இணைய பயங்கரவாதம் உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த 25ஆம் தேதி தில்லி காவல் துறையின் உளவுப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது. 

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர். தொடர்ந்து ஆறாவது நாளாக எய்ம்ஸ் சர்வர் செயலிழந்துள்ளதால், நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆறு நாள்களில் மட்டும் 3 முதல் 5 கோடி நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவசரகால சேவைகள், நோயாளி பராமரிப்பு, வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் மற்றும் ஆய்வக பிரிவுகள் போன்றவற்றின் தரவுகளை மனித உள்ளீடுகள் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலைகளை எய்ம்ஸ் மருத்துவமனை கையாண்டு வருகிறது. 

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சக பிரதிநிதிகளுடன் இந்தியாவின் கம்யூட்டர் எமர்ஜென்ஸி ரெஸ்பார்ஸ் டீம் இதனை சரிசெய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com