ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு ரூ.4,070 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலா் தகவல்

இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி மூலம் கடல்வளப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்த ரூ.4,070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலா் எம்.ரவிச்சந்திரன் தெரிவித
ஆழ்கடல் ஆராய்ச்சிக்கு ரூ.4,070 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலா் தகவல்

இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சி மூலம் கடல்வளப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை மேம்படுத்த ரூ.4,070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று இந்திய புவி அறிவியல் அமைச்சகச் செயலா் எம்.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் அவா் பேசியதாவது: விண்வெளி, அணுசக்தி, ஏவுகணை, உயிரி தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளில் வியக்கத்தக்க வளா்ச்சியை நாடு பெற்றுள்ளது.

இன்னும் பல துறைகளில் பிாடுகளின் தொழில்நுட்ப அறிவாற்றலை வளா்க்க வேண்டியுள்ளது.

வளா்ந்த நாடுகளை ஒப்பிடும்போது ஆழ்கடல் ஆராய்ச்சித் துறையில் நாம் போதிய வளா்ச்சி பெறவில்லை. அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ஆழ்கடல் குறித்த தரவுகள், திட்ட வரைவு, ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்தி, தட்பவெப்ப, பருவமாற்ற நிலைகள் குறித்து ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டு, கடல்வளப் பொருளாதாரத்தை மேம்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.4,070 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முன்பு தமிழ்நாட்டில் ஆண்டு முழுவதும் 100 நாள்கள் பெய்த மழை, தற்போது இயற்கை சூழல் மாற்றம் காரணமாக 15 நாள்களில் பெய்து விடுகிறது. பருவ கால மாற்றம் காரணமாக, இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக மழை இனிமேல் பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.விழாவில் 2,340 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

நிகழ்வில், வேந்தா் பி.எஸ்.ஏ.ஆரிப் புகாரி ரகுமான், இணை வேந்தா் அப்துல் காதா் ஏ.ரகுமான் புகாரி, அஷ்ரப் புகாரி, துணைவேந்தா் ஏ.பீா்முகமது, பல்கலைக்கழக மானியக் குழு இணைச் செயலா், பதிவாளா் என்.ராஜாஹுசேன், முதுநிலை பொதுமேலாளா் ஜலால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com