பயிர்க் காப்பீடு செய்த விவசாயிக்கு அதிர்ச்சி; வங்கியில் வரவு வைக்கப்பட்ட ரூ.1.76

மகாராஷ்டிர விவசாயி கிருஷ்ணா ரௌத் (32), செப்டம்பர் மாதம் பெய்த மழையால், சோயா பீன்ஸ் விதைத்து வீணாகப் போனதால், காப்பீட்டுத் தொகைக்காக காத்திருந்தார்.
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிக்கு அதிர்ச்சி; வங்கியில் வரவு வைக்கப்பட்ட ரூ.1.76
பயிர்க் காப்பீடு செய்த விவசாயிக்கு அதிர்ச்சி; வங்கியில் வரவு வைக்கப்பட்ட ரூ.1.76


ஔரங்காபாத்: மகாராஷ்டிர விவசாயி கிருஷ்ணா ரௌத் (32), செப்டம்பர் மாதம் பெய்த மழையால், சோயா பீன்ஸ் விதைத்து வீணாகப் போனதால், காப்பீட்டுத் தொகைக்காக காத்திருந்தார்.

ரூ.25,000 செலவிட்டு சோயாபீன்ஸ் விதைத்து நட்டமடைந்ததால், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனக்கு நிவாரணத் தொகைக் கிடைத்தால் அதனைக் கொண்டு மீண்டும் விவசாயத்தைத் தொடங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் காத்திருந்திருந்திருக்கிறார்.

ஆனால், அவரது வங்கிக் கணக்கில் வைக்கப்பட்ட தொகையைப் பார்த்ததும் அவர் அதிர்ந்தேபோய்விட்டார். ஆம், நிவாரணத் தொகையாக 1.76 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இவருடன் மேலும் சில விவசாயிகளுக்கும் இதுபோலவே இழப்பீடுத் தொகை வந்துள்ளது. ஆனால் இவர் அளவுக்கு மோசமில்லை.. ஒருவருக்கு ரூ.14.21ம், மற்றொருவருக்கு ரூ.37.31ம் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துள்ளது.

பயிர்க்காப்பீட்டுக்கு ரூ.455ம், இழப்பை அளவிட ரூ.200ம் கட்டணமாகச் செலுத்தியிருந்தேன். ஒரு ஏக்கருக்கு ரூ.27,000 வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைத்திருக்கும் தொகை சிரிப்பைத்தான் வரவழைத்துள்ளது என்கிறார் மனம் வருந்தியபடி.

சில அல்லது பல நூறுகளை செலவிட்டு பயிர்க்கப்பீடு எடுத்திருப்பவர்களுக்கு அதிகபட்சடமாக ரூ.73 வரை பயிர்க்காப்பீடாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com