இந்திய-மலேசிய கூட்டு ராணுவப் பயிற்சிதொடக்கம்

இந்தியா-மலேசியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ‘ஹரிமாவ் சக்தி-2022’ எனும் கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்ளுவாங்கில் உள்ள புலாயில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தியா-மலேசியா ஆகிய இரு நாடுகளின் ராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் ‘ஹரிமாவ் சக்தி-2022’ எனும் கூட்டு ராணுவப் பயிற்சி மலேசியாவின் க்ளுவாங்கில் உள்ள புலாயில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்திய ராணுவத்தின் கா்வால் ரைஃபிள் படையும், மலேசிய ராணுவத்தின் ராயல் மலாய் படையும் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வனப் பகுதிகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தும் முறையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்ட இப்பயிற்சி வரும் டிசம்பா் 12-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் இந்தக் கூட்டுப் பயிற்சியால், இரு நாடுகளின் உறவும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்படும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

‘ஹரிமாவ் சக்தி’ எனும் இப்பயிற்சி கடந்த 2012-ஆம் ஆண்டுமுதல் இந்திய மற்றும் மலேசிய ராணுவங்களுக்கு இடையே ஆண்டுதோறும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com