தொடரும் பணிநீக்கம்.. டெய்லிஹன்ட், ஜோஷ் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை

செய்தி சேகரிப்புத் தளமான டெய்லிஹன்ட் மற்றும் ஷார்ட்-விடியோ தளமான ஜோஷ் ஆகியவற்றின் தலைமை நிறுவனம் வெர்சே இன்னோவேஷன் தனது ஊழியர்களில் 150 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது.
தொடரும் பணிநீக்கம்.. டெய்லிஹன்ட், ஜோஷ் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை
தொடரும் பணிநீக்கம்.. டெய்லிஹன்ட், ஜோஷ் நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை

பெங்களூரு: செய்தி சேகரிப்புத் தளமான டெய்லிஹன்ட் மற்றும் ஷார்ட்-விடியோ தளமான ஜோஷ் ஆகியவற்றின் தலைமை நிறுவனம் வெர்சே இன்னோவேஷன் தனது ஊழியர்களில் 150 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது.

டிவிட்டர், மெட்டா, கூகுள் வரிசையில், வெர்சே இன்னோவேஷன் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஊழியர்களில் 5 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெர்சே இன்னோவேஷன் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், தற்போதிருக்கும் பொருளாதார சூழ்நிலை, இதர வணிகங்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு நமது கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில்  மதிப்பீடு செய்யப்பட்டது. நிறுவனத்தின் நீண்டகால நம்பகத்தன்மை, நமது ஊழியர்களைக் கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் அரையாண்டு செயல்பாடுகள், நிர்வாக செயல்திறன் சுழற்சி மற்றும் ஊழியர்களின் திறனைக் கணக்கிட்டு, செலவினத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதன் தொடர்ச்சியாகவே ஒட்டுமொத்தமாக உள்ள 3,000 ஊழியர்களில் 5 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிநீக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நிறுவனத்தில், ஆண்டுக்கு 10 லட்ச ரூபாய்க்கும் மேல் ஊதியம் வாங்கும் ஊழியர்களுக்கு 11 சதவீத ஊதியம் பிடித்தத்தையும் அறிவித்துள்ளது.

நீண்ட கால லாபத்துடன் கூடிய வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், ஊழியர்களின் திறனைக் கணக்கிட்டு, நிதிநிலைமையையும் சரியாக்கும் வகையில் 11 சதவீத ஊதியம் பிடித்தத்தையும் அறிவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

வெர்சே இன்னோவேஷனின் ஒட்டுமொத்த செயலிகளின் குழுமங்களான - ஜோஷ், டெய்லி ஹன்ட் மற்றும் பப்ளிக்வைப் ஆகியவை லாபத்துடனான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன.

தலைமைப் பொறுப்பை பலப்படுத்தும் வகையில், வெர்சே தனது முதலீட்டை  உற்றுநோக்குவதாகவும், உள்ளூர் மொழிகளின் அடிப்படையிலான இயங்குதளங்களின் வளர்ச்சி நாட்டில் அதிகரித்திருப்பதை கவனத்தில் எடுத்திருப்பதகாவும் கூறியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com