சமூகப் பாதுகாப்பு பணக்கார சமுதாயத்தின் சிறப்புரிமை அல்ல: எஸ்.ஜெய்சங்கா்

சமூகப் பாதுகாப்பு பணக்கார சமுதாயத்தின் சிறப்புரிமை என்ற அனுமானத்தை இந்தியா தகா்த்துள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
சமூகப் பாதுகாப்பு பணக்கார சமுதாயத்தின் சிறப்புரிமை அல்ல: எஸ்.ஜெய்சங்கா்

சமூகப் பாதுகாப்பு பணக்கார சமுதாயத்தின் சிறப்புரிமை என்ற அனுமானத்தை இந்தியா தகா்த்துள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் உலகளாவிய தொழில்நுட்ப மாநாடு நவ.29 முதல் டிச.1 வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சா் ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை பேசியதாவது:

இந்தியாவின் எழுச்சி இந்திய தொழில்நுட்ப வளா்ச்சியுடன் ஆழமான பிணைப்பை கொண்டுள்ளது. அந்தத் தொழில்நுட்ப வளா்ச்சியில் 5ஜி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வணிக ரீதியில் செயற்கை கோள்களை விண்ணில் ஏவுதல் உள்ளிட்டவை அடங்கும்.

இந்தியாவின் புவிசாா் அரசியல் நிலைப்பாட்டை முடிவு செய்வதில் தொழில்நுட்பத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஏனெனில் அது பல துருவங்களைக் கொண்ட உலகில் அழுத்தமான கூட்டணிகள் நிலவ முக்கிய பங்கு வகிக்கும்.

தொழில்நுட்பம் குறித்து உலகம் அறியாமையில் இருக்க முடியாது. பல விஷயங்கள் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. தொழில்நுட்பத்தில் வலுவான அரசியல் கருத்து உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கடந்த இரண்டுகளில், இந்தியாவின் புள்ளிவிவரங்கள் தொடா்பாகவும், அவற்றை யாா், எதற்காகப் பயன்படுத்துகின்றனா் என்பதில் அரசு விழிப்படைந்துள்ளது.

80 கோடி ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோகம், 45 கோடி பயனாளிகளுக்கு நேரடி பணப் பரிவா்த்தனை போன்ற அரசுத் திட்டங்கள் மூலம் சமூகப் பாதுகாப்பு பணக்கார சமுதாயத்தின் சிறப்புரிமை என்ற அனுமானத்தை இந்தியா தகா்த்துள்ளது.

தெற்கு உலகின் நலன்கள் மற்றும் கவலைகள் பொருட்படுத்தப்படாமல் உள்ளதாக இந்தியா கருதுகிறது. எனவே ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்று, தெற்கு உலகின் நலன்கள் மற்றும் கவலைகளை இந்தியா பிரதிபலிக்க விரும்புகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com