26 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகும் தென்மாநிலத்தவர்

காங்கிரஸ் கட்சியில் 26 ஆண்டுக்குப் பிறகு தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
26 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராகும் தென்மாநிலத்தவர்

காங்கிரஸ் கட்சியில் 26 ஆண்டுக்குப் பிறகு தென் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகும் வாய்ப்பு உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்துள்ளது. அதில் அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்புமனுவை விதிமுறைகளின்படி பூர்த்தி செய்யாததால் கே.என்.திரிபாதியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 8ஆம் தேதிக்குள் இவ்விருவரில் யாரும் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெறவில்லையெனில் அக்டோபர் 17இல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு 19இல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த இருவரும் தென்மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் 26 ஆண்டுகளுக்குப் பிறகு அக்கட்சியின் தலைவராக மீண்டும் தென்மாநிலத்தைச் சேர்ந்தவர் தேர்வாவது உறுதியாகியுள்ளது. 

இறுதியாக 1992 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் பி.வி.நரசிம்மராவ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்தார். அதன்பிறகு தென்மாநிலத்திலிருந்து யாரும் தலைவர் பதவியை அலங்கரிக்கவில்லை. 

இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சசி தரூருக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தென்மாநிலத்தைச் சேர்ந்தவர் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com