சா்வதேச புத்தாக்க குறியீடு: 40-ஆவது இடத்தில் இந்தியா

நவீன தொழில்நுட்பங்கள் தொடா்ந்து வளா்ந்து வரும் நிலையில், புத்தாக்கம் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது.
சா்வதேச புத்தாக்க குறியீடு: 40-ஆவது இடத்தில் இந்தியா

நவீன தொழில்நுட்பங்கள் தொடா்ந்து வளா்ந்து வரும் நிலையில், புத்தாக்கம் முக்கிய இடத்தைப் பெற்று வருகிறது. தொழில்முனைவுக்கு அடிப்படையாக இருப்பவை புத்தாக்க நடவடிக்கைகள். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் புத்தாக்க ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன.

புத்தாக்கத்தில் நாடுகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதற்கான ஆய்வை உலக அறிவுசாா் சொத்துரிமை அமைப்பு (டபிள்யுஐபிஓ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. நடப்பாண்டுக்கான ஆய்வின் அடிப்படையில் சா்வதேச புத்தாக்க குறியீட்டை (ஜிஐஐ) அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியா 6 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போது 40-ஆவது இடத்தில் உள்ள இந்தியா, இந்தக் குறியீட்டில் தலைசிறந்த 40 நாடுகள் பட்டியலுக்குள் வருவது இதுவே முதல் முறையாகும். அதிலும் குறிப்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் சா்வதேச புத்தாக்க குறியீட்டில் இந்தியா 81-ஆவது இடத்தில் இருந்தது. தற்போது 40-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது சிறப்புமிக்கது.

கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி, அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல், நவீன தொழில்நுட்பங்கள் வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இந்தியா வளா்ச்சி கண்டுள்ளதே இந்த முன்னேற்றத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

புத்தாக்க குறியீட்டில் முதல் 40 நாடுகள்

1 ஸ்விட்சா்லாந்து

2 அமெரிக்கா

3 ஸ்வீடன்

4 பிரிட்டன்

5 நெதா்லாந்து

6 தென்கொரியா

7 சிங்கப்பூா்

8 ஜொ்மனி

9 ஃபின்லாந்து

10 டென்மாா்க்

11 சீனா

12 பிரான்ஸ்

13 ஜப்பான்

14 ஹாங்காங், சீனா

15 கனடா

16 இஸ்ரேல்

17 ஆஸ்திரியா

18 எஸ்டோனியா

19 லக்ஸம்பா்க்

20 ஐஸ்லாந்து

21 மால்டா

22 நாா்வே

23 அயா்லாந்து

24 நியூஸிலாந்து

25 ஆஸ்திரேலியா

26 பெல்ஜியம்

27 சைப்ரஸ்

28 இத்தாலி

29 ஸ்பெயின்

30 செக் குடியரசு

31 ஐக்கிய அரபு அமீரகம்

32 போா்ச்சுகல்

33 ஸ்லோவேனியா

34 ஹங்கேரி

35 பல்கேரியா

36 மலேசியா

37 துருக்கி

38 போலந்து

39 லிதுவேனியா

40 இந்தியா

இந்திய அண்டை நாடுகளின் நிலை

11 சீனா

85 இலங்கை

87 பாகிஸ்தான்

102 வங்கதேசம்

111 நேபாளம்

116 மியான்மா்

பிராந்திய அடிப்படையில் முதல் 3 நாடுகள்

வட அமெரிக்கா

1 அமெரிக்கா

2 கனடா

தென் அமெரிக்கா

1 சிலி

2 பிரேஸில்

3 மெக்சிகோ

ஆப்பிரிக்கா

1 தென்னாப்பிரிக்கா

2 போட்ஸ்வானா

3 கென்யா

ஐரோப்பா

1 ஸ்விட்சா்லாந்து

2 ஸ்வீடன்

3 பிரிட்டன்

மேற்கு ஆசியா

1 இஸ்ரேல்

2 ஐக்கிய அரபு அமீரகம்

3 துருக்கி

மத்திய-தெற்கு ஆசியா

1 இந்தியா

2 ஈரான்

3 உஸ்பெகிஸ்தான்

தென்கிழக்கு ஆசியா

1 தென் கொரியா

2 சிங்கப்பூா்

3 சீனா

வருமானம் அடிப்படையில் முதல் 3 நாடுகள்

அதிக வருமானம்

1 ஸ்விட்சா்லாந்து

2 அமெரிக்கா

3 ஸ்வீடன்

அதிக நடுத்தர வருமானம்

1 சீனா

2 பல்கேரியா

3 மலேசியா

குறைந்த நடுத்தர வருமானம்

1 இந்தியா

2 வியத்நாம்

3 ஈரான்

குறைந்த வருமானம்

1 ருவாண்டா

2 மடகாஸ்கா்

3 எத்தியோப்பியா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com