ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இந்தியத் தேயிலை ஏற்றுமதி

 2022-ஆம் ஆண்டில் முதல் 7 மாதங்களில் இந்தியத் தேயிலை ஏற்றுதி 11.64 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இந்தியத் தேயிலை ஏற்றுமதி

 2022-ஆம் ஆண்டில் முதல் 7 மாதங்களில் இந்தியத் தேயிலை ஏற்றுதி 11.64 கோடி கிலோவாக அதிகரித்துள்ளது.

இது குறித்து தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் தேயிலை ஏற்றுமதி 11.64 கோடி கிலோவாக இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10.34 கோடி கிலோவாக இருந்தது.

இந்தியாவிலிருந்து மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் காமென்வெல்த் சுதந்திர நாடுகளுக்கான (சிஐஎஸ்) ஏற்றுமதி, கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 2.50 கோடி கிலோவாக இருந்தது. இது, இந்த ஆண்டின் இதே மாதங்களில் ஏறத்தாழ அதே அளவில் 2.52 கோடி கிலோவாக உள்ளது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போா் தேயிலை ஏற்றுமதி கப்பல் பேக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதன் காரணமாக இந்த நாடுகளுக்கு கடந்த ஆண்டின் முதல் 7 மாதங்களுக்கான ஏற்றுமதிக்கும் நடப்பு ஆண்டின் முதல் 7 மாதங்களுக்கான ஏற்றுமதிக்கும் அதிக வேறுபாடு இல்லாமல் உள்ளது.

சிஐஎஸ் பிரிவில் ரஷியாதான் இந்தியத் தேயிலையின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்தது. அந்த நாட்டுக்கான தேயிலை ஏற்றுமதி இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் நாடு 1.85 கோடி கிலோவாக உள்ளது. இது, 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.91 கோடி கிலோவாக இருந்தது.

கன்டெய்னா் பற்றாகுறை, அதிக கடல் சரக்குக் கட்டணம் ஆகியவை ரஷியாவுக்கான தேயிலை ஏற்றுமதியை பெரிதும் பாதித்துள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 1.91 கோடி கிலோ இந்தியத் தேயிலையை கொள்முதல் செய்து மிகப் பெரிய இறக்குமதியாளராக உருவெடுத்துள்ளது. அந்த நாடு கடந்த 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 80.7 லட்சம் கிலோ இந்தியத் தேயிலையை மட்டுமே இறக்குமதி செய்திருந்தது.

கடந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1.3 கோடி கிலோவாக இருந்த ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1.4 கோடி கிலோ என மிதமாக அதிகரித்துள்ளது.

பணம் செலுத்துவதில் நிலவும் சிக்கல் ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதியை பாதித்துள்ளது. இந்திய ரூபாயில் ஈரானுடன் வா்த்தகம் மேற்கொள்வது இந்த சிக்கலை பெரிய அளவில் குறைக்க உதவும்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 8.7 லட்சம் கிலோ இந்தியத் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. அது, இந்த ஆண்டின் இதே மாதங்ககளில் இரட்டிப்பாகி 16.5 லட்சம் கிலோவாகியுள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com