மின்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை: புதுச்சேரி அரசு

மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
மின்துறை ஊழியர்களுக்கு எச்சரிக்கை: புதுச்சேரி அரசு


மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மின் துறை தனியாா்மயத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரியில் மின் ஊழியா்கள் ஐந்தாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், மின் பழுது நீக்குதல், மின் கட்டணக் கணக்கீடு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊழியா்களின் போராட்டத்தால், துணைமின் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

புதுச்சேரியில் நகரம், கிராமப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. புதுச்சேரி கோரிமேடு, சாரம் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால், இதனால், கோபமடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டதால், தமிழகப் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களும், பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து தமிழகப் பகுதிக்குச் செல்லக் கூடிய வாகனங்களும் செல்ல முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுதொடர்பாக புதுச்சேரி மின்துறை தலைமை பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மின்விநியோக பணியை மெற்கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமாகும் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  புதுச்சேரியில் மின்வெட்டால் தொடரும் போராட்டத்தையொட்டி பாதுகாப்பை மேற்கொள்ளவதற்காக வரவழைக்கப்பட்டுள்ள இரண்டு கம்பெனி துணை ராணுவப்படையினா் துணை மின் நிலையங்களில் பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com