கேரளத்தின் முதல் தபால் பெண்மணி ஆனந்தவல்லி காலமானார்!

கேரளத்தின் முதல் தபால் பெண்மணி கே.ஆர். ஆனந்தவல்லி(90) காலமானார்.



கேரளத்தின் முதல் தபால் பெண்மணி கே.ஆர்.ஆனந்தவல்லி(90) காலமானார்.

கேரளம் மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த கே.ஆர் ஆனந்தவல்லி ஆலப்புழா மாவட்டம் தத்துபள்ளி தபால் நிலையத்தின் முதல் தபால் பெண்ணாக பணியில் சேர்ந்தார். 

ஆலப்புழாவில் உள்ள எஸ்டி கல்லூரி வணிகவியல் துறை பட்டதாரி பெண் ஆனந்தவல்லி, மாநிலத்தின் முதல் தபால் பெண் என்ற பெருமையை பெற்றார். ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் தபால் பெண்ணாகவும், கிளார்க் மற்றும் தபால் அலுவலர் உள்ளிட்ட பணிகளில் பணியாற்றினார். இவர் பணியின்போது பல கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் பயணித்து தபால்களை கொடுத்து வந்தார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு தபால் துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கணவர் ராஜன் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் மகன் தனராஜ் உடன் ஆலப்புழாவில் வசித்து வந்தார். 

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வயதுமூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டிலேயே ஆனந்தவல்லி காலமானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com