பாஜகவும், டிஆர்எஸும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்: ஜெய்ராம் ரமேஷ்

தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் ஒருவர் தில்லி சுல்தான், மற்றொருவர் ஹைதராபாத் நிஜாம் என்றும் காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் மற்றும் மத்தியில் ஆளும் பாஜக ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் ஒருவர் தில்லி சுல்தான், மற்றொருவர் ஹைதராபாத் நிஜாம் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் 'பாரத் ராஷ்டிர சமிதி' தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் ஆகுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றார். அதே வேளையில், ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு மட்டும் அல்ல, பாஜகவின் முகத்தைக் கொண்ட டிஆர்எஸ்-க்கும் ஒரு செய்தியே.

பாஜகவும், டிஆர்எஸ் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். தில்லி சுல்தானும், ஹைதராபாத்  நிஜாமுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றார்.

மேலும் தெரிவிக்கையில், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி, ஒன்றிரண்டு பெரிய நிறுவனங்களின் ஏகபோகம், அதிகரித்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகிய மூன்று கூற்றுக்களை பற்றி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் கவலைப்படுகிறார்கள். அதே வேளையில், சமூகம் மதம், ஜாதி, மொழி, உணவு மற்றும் உடை ஆகியவற்றின் அடிப்படையில் பிளவுபட்டதாகக் கூறப்படும் சமூக துருவமுனைப்பு இரண்டாவது கவலை. அதே நேரத்தில் அரசியல் மீதான மையப்படுத்தல் மூன்றாவது கவலை என்றார்.

தற்போது நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்ரா என்பது நீண்ட உரைகள் நிகழ்த்தப்படும் 'மன் கி பாத் யாத்ரா' அல்ல, இது மக்களின் குரல் கேட்கும் யாத்திரையாகும் என்று ரமேஷ் கூறினார்.

தசராவை முன்னிட்டு இன்று அக்டோபர் 4 மற்றும் நாளை அக்டோபர் 5ல் நடைபயணம் நிறுத்தி வைக்கப்படும் என்றும், அக்டோபர் 6 ஆம் தேதி முதல் கர்நாடகாவின் மாண்டியாவிலிருந்து மீண்டும் தொடங்கும் போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இதில் பங்கேற்பார் என்றும் ரமேஷ் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com