இந்தியா-அமெரிக்கா இடையே நாளை எரிசக்தி பேச்சுவாா்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையிலான எரிசக்தி பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (அக்.7) நடைபெறுகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையிலான எரிசக்தி பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை (அக்.7) நடைபெறுகிறது.

அமைச்சா்கள் நிலையில் நடைபெறும் இந்த பேச்சுவாா்த்தையில் இந்தியா தரப்பில் பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி பங்கேற்கிறாா்.

இதற்காக அவரது தலைமையிலான குழுவினா் அக்டோபா் 6 முதல் 11-ஆம் தேதி வரை வாஷிங்டன் மற்றும் ஹூஸ்டனுக்கு பயணம் மேற்கொள்கின்றனா்.

மாசற்ற எரிசக்திக்கான உத்தி வகுத்தல் தொடா்பாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை இரு நாட்டு அமைச்சா்கள் நிலையில் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது. இதில் அமெரிக்க தரப்பில் அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சா் ஜெனிஃபா் கிரான்ஹோம் பங்கேற்கிறாா்.

2021 ஏப்ரலில் நடைபெற்ற பருவநிலை உச்சி மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் இருநாடுகள் இடையே திருத்தியமைக்கப்பட்ட பருவநிலை மற்றும் மாசற்ற எரிசக்தி செயல்பாட்டுக்கான அமைப்பை தொடங்குவதாக அறிவித்தனா்.

அதன்படி இப்போது எரிசக்தி பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது.

இதில் நவீன எரிசக்தி பாதுகாப்பு மற்றும் கண்டுபிடிப்பு, தூய எரிசக்தி தொழில்நுட்பங்களை அதிகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

தொடா்ந்து பருவநிலை ஸ்திரத்தன்மைக்கான நகா்ப்புற அடிப்படை கட்டமைப்பு குறித்து உலக வங்கி அதிகாரிகளுடன் அமைச்சா் ஹா்தீப் சிங் பூரி கலந்துரையாட இருக்கிறாா் . வாஷிங்டனில் அமெரிக்க -இந்திய வா்த்தக கவுன்சிலனுடனும், ஹூஸ்டனில் அமெரிக்கா-இந்திய உத்தி வகுத்தல் பங்களிப்பு அமைப்புடனும் அவா் பேச இருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com