ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கிவைத்தார் கெலாட்! 

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் உச்சிமாநாட்டை முதல்வர் கெலாட், கௌதம் அதானி உள்ளிட்ட மூத்த தொழிலதிபர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 
ராஜஸ்தான் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை தொடங்கிவைத்தார் கெலாட்! 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் உச்சி மாநாட்டை முதல்வர் கெலாட், கௌதம் அதானி உள்ளிட்ட மூத்த தொழிலதிபர்கள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

ஜெய்ப்பூரில் உள்ள ஜேஇசிசி வளாகத்தில் 2 நாள் முதலீட்டு உச்சி மாநாட்டை மாநில அரசு நடத்துகிறது. இந்நிகழ்ச்சியில் மாநில தொழில் துறை அமைச்சர் சகுந்தலா ராவத்தும் கலந்துகொள்கிறார். 

இந்த உச்சி மாநாட்டில் ரூ.10.44 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. 

அக்டோபர் 7,8ல் நடைபெறும் இரண்டு நாள் உச்சி மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள கார்ப்பரேட் குழுக்களின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கின்றனர். 

இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம், குறிப்பிடத்தக்க வணிக தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், சிந்தனைத் தலைவர்கள் மற்றும் கொள்கை மற்றும் கருத்து உருவாக்குபவர்களின் பல்வேறு குழுக்களை ஒன்றிணைத்து அந்தந்த துறைகளுக்கான தயாரிப்புகளைப் பற்றி விவாதிப்பதாகும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முடிவதிலுமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். 

உலகின் முன்னணி முதலீட்டாளர்கள் ராஜஸ்தானின் வளர்ச்சி மற்றும் துறைகளில் புதுமைக்கான மகத்தான திறனை அங்கீகரித்துள்ளனர். முதலீட்டுத் திட்டங்கள் நமது பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும், இதன் விளைவாக லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாகும். மேலும், இது மாநிலத்தின் அதிவேக வளர்ச்சி மற்றும் தொழில் மயமாக்கலுக்கு புதிய ஒத்துழைப்பாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உச்சி மாநாட்டின் முதல் நாளில் ராஜஸ்தான் ரத்னா விருதுகளைப் பெறுபவர்களின் பெயர் பட்டியலை முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com